தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கையைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியேறிய வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு! - இலங்கையை சேர்ந்தவர்கள் இந்தியாவில் தஞ்சம், அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேர் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி பின்பு தப்பி ஓடிய வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai HC

By

Published : Nov 5, 2019, 7:13 PM IST

இலங்கையைச் சேர்ந்தவர்கள் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சமடைந்து, போலி ஆதார் அட்டையை தயாரித்ததாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல் துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தங்களை இலங்கைக்கு அனுப்பக்கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட் கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த வழக்கில், கீழமை நீதிமன்றம் உத்தரவின் படி அவர்கள் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இடைப்பட்ட நேரத்தில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருக்கும் போது எவ்வாறு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்புடைய வழக்கு அல்லவா என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் ஆஜராகி இந்தியாவில் இருந்த தப்பி ஓடிய இருவரும் இலங்கை நீதிமன்றத்தில் சரணடைந்து சிறை காவலில் உள்ளனர் என்று தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதிகள் வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடவடிக்கை குறித்து அறிக்கையை அரசு நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்தவர்கள் எங்கே? - உயர் நீதிமன்றம் கேள்வி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details