பிரபல ரவடி கொலை வழக்கு - இருவர் சரண்! - ரவுடி
மதுரை: பிரபல ரவுடி தலையை வெட்டி குப்பையில் வீசிய சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மதுரை முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சவுந்தர பாண்டியனை மே 25ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து கொடூரமாக வெட்டி தலையைக் குப்பையில் வீசி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி பிள்ளையார் கணேசன் உட்பட ஆறு பேரை சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இந்த சம்பவத்திற்கு உதவியதாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் தட்சிணாமூர்த்தி இரண்டு இளைஞர்களை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) சரணடைந்தனர்,
அதனைத் தொடர்ந்து, ஜூன் 17ஆம் தேதி வரை அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கௌதமன் உத்தரவிட்டார்.