சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் மாணிக்க வள்ளி அம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடந்துவருகிறது. 10ஆம் நாள் திருவிழாவான நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொழுவில் மாடு அவிழ்த்து விடுவதற்கு முன்னதாகவே கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு திடலில் ஆங்காங்கே காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்தக் காளைகள் வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்கள் கூட்டத்தில் புகுந்தது.
சிவகங்கையில் மஞ்சுவிரட்டு: மாடு முட்டி 2 பேர் பலி - manjuvirattu
சிவங்கை: திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 2 பேர் பலி
இதில், மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அமராவதி புதூரைச் சேர்ந்த சேவுகன், கே. வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜீ ஆகியோரை மாடு முட்டியது. இதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதற்கிடையே, மேல் சிகிச்சைக்காக இரண்டு பேர் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.