தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.2.56 லட்சம் பணம் பறிமுதல் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

மதுரை: இருசக்கர வாகனத்தில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.56 லட்சம் பணத்தை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2.56 லட்சம் பணம் பறிமுதல்
ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2.56 லட்சம் பணம் பறிமுதல்

By

Published : Mar 13, 2021, 10:30 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நபர் ஒருவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.2.56 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த பணத்தை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை குறைவாகக் காட்டுகின்றனரா பறக்கும் படையினர்?

ABOUT THE AUTHOR

...view details