மதுரை:171 பொதுத்துறை நிறுவனங்களும் லாபத்தில் இயங்குகின்றன என நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் காரத் தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இன்று (ஆகஸ்ட் 10) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் 171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகிறது என்று நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதி இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் காரத் பதில் அளித்துள்ளார்.
இணை அமைச்சர் பதில்
2019 - 20 நிதியாண்டில் 171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன. அவற்றில் 10 மகாரத்னாக்கள், 14 நவரத்னாக்கள், 73 மினிரத்னாக்கள் உள்ளன. மகாரத்னாவாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், மினி ரத்னாக்களாக ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, கன்டைனர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, மினி ரத்னா நிறுவனங்களாக பாரத் எர்த் மூவர் லிமிடெட், பவான் ஹான்ஸ் லிமிடெட் உள்ளன. இவை கேந்திர விற்பனை வாயிலாக தனியாருக்கு விற்கப்படுமெனத் தெரிவிக்கக்பபட்டுள்ளது.