தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசைகாட்டி 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது - POSCO ARREST

மதுரை: 17 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

posco
posco

By

Published : Aug 24, 2020, 11:20 AM IST

மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இவருக்கு 17 வயதில் மகள், மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதியன்று மதியம் 2 மணி அளவில் டியூசன் சென்ற பால்பாண்டியின் மகள் வீடு திரும்பவில்லை.

எனவே மகளைக் காணவில்லை என நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினரிடம் பால்பாண்டி புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அச்சிறுமியைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மதுரை ஒந்திமலைப் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் என்பவரின் மகன் பரதன் மேலக்குயில்குடியிலுள்ள அவரது தாத்தா வீட்டிற்கு அடிக்கடி சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசித்துவந்த பால்பாண்டியின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவத்தன்று அச்சிறுமியை திருமண ஆசை வார்த்தைக் கூறி கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து அச்சிறுமியைமீட்டு நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் பால்பாண்டி, அவரது மகள் அளித்த புகாரின்பேரில் பரதனை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ]

இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details