மதுரை : மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 88 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.
மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பி.ஆர்.பிரியங்கா 720 மதிப்பெண்களுக்கு 414 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஏ.ஹரிஷ்குமார் 373 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மதுரை மாநகராட்சி ஈவெரா நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஆஷிகா ராணி 353 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
மேலும் மாவட்டத்தில் தேர்வெழுதிய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 288 பேரில், 88 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.