மதுரை ரிசர்வ் லைன் ஆயுதப்படை மைதானம் அருகே புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் வாசலில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் படுத்திருப்பதை அறிந்த காவல் துறையினர், அருகில் சென்று பார்த்தபோது அவர் வைத்திருந்த கம்பி மூலம் படுத்துக்கொண்டே நூதன முறையில் கோயில் உண்டியல் பணத்தை திருடிக் கொண்டு இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவரை பிடித்து தல்லாகுளம் காவல் நிலையம் அழைத்து வந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பதும், இவர் கடந்த 15 வருடங்களாக மதுரை மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் இரவு நேரங்களில் நூதன முறையில் உண்டியலில் உள்ள பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.