தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு உண்டியல் மூலம் சுமார் ரூ.15 லட்சம் வருமானம்! - thiruparankundram kovil news

மதுரை: சரஸ்வதி, ஆயூத பூஜையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உண்டியல்கள் மூலம் ரூ.15 லட்சத்து 416 வருமானம் கிடைத்துள்ளது.

திருப்பரங்குன்றம்

By

Published : Oct 10, 2019, 11:46 PM IST

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 35 நிரந்தர உண்டியல்கள் உள்ளன . இந்த உண்டியல்களில் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் தங்கம், வெள்ளி மற்றும் பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதில் உண்டியல்கள் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோயில் நிர்வாகத்தினர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் கோயில் பணியாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தமாக உண்டியல் எண்ணப்பட்டு முடிவடைந்ததையடுத்து, கோயிலுக்கு ரூ. 15 லட்சத்து 416 வருமானம் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு உண்டியல் மூலம் சுமார் ரூ. 15 லட்சம் வருமானம்

மேலும் 110 கிராம் தங்கமும் 1 கிலோ 200 கிராம் வெள்ளியும் காணிக்கையாக இருந்ததாகவும், கடந்த மாதத்தைவிட இந்த மாதத்தில் காணிக்கைகள் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 'பிகில்' படப்பிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details