மதுரை அரசு ராசாசி மருத்துவமனை விரிவாக்கக் கட்டடத்தின் எதிரே அமைந்துள்ள அரசு பல்நோக்கு சிகிச்சை மைய வளாகத்தில், கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது.
இங்கு, மதுரை, அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமன்றி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா பாதிப்புக்குள்ளானவர்களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே, தமிழ்நாடு சுகாதாரத் துறை நேற்று (ஜூன் 10) வெளியிட்ட செய்திக் குறிப்பில், இங்கு இதுவரை 343 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளனர். ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தற்சமயம் சுமார் 80 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இன்று (ஜூன் 11) மட்டும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 13 பேர் கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க :கஞ்சா விற்ற வழக்கில் கைதான பெண்ணுக்கு கரோனா