தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தை காப்பகத்தில் 10 சிறுமிகள் உட்பட 12 பேருக்கு கரோனா! - madurai latest news

மதுரை: குழந்தைகள் காப்பகத்தில் 10 சிறுமிகள் உட்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தை காப்பகத்தில் 10 சிறுமிகள் உட்பட 12 பேருக்கு கரோனா
குழந்தை காப்பகத்தில் 10 சிறுமிகள் உட்பட 12 பேருக்கு கரோனா

By

Published : May 25, 2021, 6:47 AM IST

மதுரை மாவட்டம், சமயநல்லூர் சபரி நகர் பகுதியில் ஆதரவற்றோர்களுக்காக 'சாந்தி இல்லம்' என்கிற தனியார் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு 6 வயதிற்குட்பட்ட 27 சிறுமிகள், 8 பணியாளர்கள் உள்ளனர். காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிகள் அப்பகுதியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், காப்பகத்திலேயே தங்கிருந்தனர். இந்நிலையில் அங்கு தங்கியிருந்த பணியாளர் ஒருவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து காப்பகத்தில் தங்கியிருந்தத 27 குழந்தைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ததில், 10 குழந்தைகள், 2 பணியாளர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காப்பகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெல்லை சென்றது ஆக்ஸிஜன் லாரி!

ABOUT THE AUTHOR

...view details