தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆலமரத்துக்கு பிறந்தநாள் கொண்டாடிய மதுரை மக்கள்

மதுரை மாவட்டம் செல்லூர் அருகே 102 ஆண்டு பழமையான ஆலமரத்துக்கு மக்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

ஆலமரத்துக்கு பிறந்தநாள் கொண்டாடிய ஆர்வலர்கள்
ஆலமரத்துக்கு பிறந்தநாள் கொண்டாடிய ஆர்வலர்கள்

By

Published : Jul 26, 2021, 8:02 AM IST

Updated : Jul 26, 2021, 9:03 AM IST

மதுரை: செல்லூர் மீனாட்சிபுரம் அருகே கண்மாய் கரையோரம் வளர்ந்துள்ள ஆலமரம் ஒன்றுக்கு 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

செல்லூர் கண்மாய் கரையோரத்தில் ஏழுக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் வளர்ந்தன. அவைகளை முறையாக பராமரிக்கப்படாத நிலையில் காலப்போக்கில் அழிந்துவிட்டன. எஞ்சியுள்ள ஒரு ஆலமரம் மட்டும் நூற்றாண்டை கடந்து கம்பீரமாக நிற்கிறது.

ஆலமரத்துக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆலமரத்துக்கு பிறந்தநாள்

இந்நிலையில் நூற்றாண்டை கடந்த ஆலமரத்தை பாதுகாக்கக் கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆண்டுதோறும் பிறந்தநாள் விழா கொண்டாடிவருகின்றனர்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

ஆலமரத்தின் 102 ஆவது பிறந்தாளை முன்னிட்டு நேற்று (ஜூலை 25) அப்பகுதி மக்கள், நீர்நிலை இயக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இணைந்து கேக்வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

விழிப்புணர்வு

இந்த நிகழ்ச்சியை ஒட்டி, நாட்டு மரங்களை பாதுகாக்கும் வகையில் சிறுவர்களுக்கு ஆலமரக்கன்றுகளை வழங்கி அதனை கண்மாய் கரைகளில் நட்டனர்.

இது குறித்து நீர்நிலை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் கூறுகையில், "மரங்களின் தேவை குறித்து வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தும் வகையிலும், நாட்டு இன மரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் இது போன்ற பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும்பொதுமக்களோடு இணைந்து கொண்டாடி வருகிறோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: TNPL 2021: திருச்சி, திண்டுக்கல் அணிகள் அசத்தல் வெற்றி

Last Updated : Jul 26, 2021, 9:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details