தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரக்கு வேன் மீது பயணிகள் வேன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு; 7 பேர் படுகாயம் - 7 தொழிலாளிகள் படுகாயம்

மதுரை: திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் பழுதாகி நின்ற சரக்கு வேன் மீது, பின்னால் வந்த பயணிகள் வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 7 பேர் படுகாயமடைந்தனர்.

சரக்கு வேன் மீது பயணிகள் வேன் மோதியதில் ஒருவர் பலி 7 பேர் படுகாயம்
சரக்கு வேன் மீது பயணிகள் வேன் மோதியதில் ஒருவர் பலி 7 பேர் படுகாயம்

By

Published : Sep 2, 2020, 7:45 PM IST

கோயம்புத்தூர் சிவானந்தா காலனியைச் சேர்ந்த எட்டு பேர், வேனில் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் இயந்திரம் பழுது பார்க்கும் வேலைக்காக புறப்பட்டு வந்தனர். வேனை கோபி என்பவர் ஓட்டி வந்தார். வேன் இன்று (செப்.2) அதிகாலை 5 மணிக்கு திருமங்கலம் அருகே கப்பலூர் நான்கு வழிச்சாலையில் வந்தது. அப்போது சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் ஒன்றும் இருந்தது.

இதனைக் கவனிக்காத ஓட்டுநர் கோபி, முன்னால் நின்ற சரக்கு வேன் மீது மோதியதில், கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள், திருமங்கலம் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த வேன் ஓட்டுநர் கோபியை ஒரு மணி நேரம் போராடி, மீட்புப்படை வீரர்கள் மீட்டு, அவரது உடலை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் காயமடைந்தவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையிலேயே இருந்தனர். திருமங்கலத்தில் 108 ஆம்புலன்ஸ் குறைவாக உள்ளதால், விபத்தில் காயமடைந்தவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, கூடுதல் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details