மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் அருகே நான்கு வழிச்சாலையில், நாகமலை புதுக்கோட்டை காவல் துறையை சேர்ந்த சார்பு ஆய்வாளர் கோபிநாத் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த மலர்ராஜனின் இருசக்கர வாகனம் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
கஞ்சா கடத்தியவர் கைது: 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் - corona updates
மதுரை: இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவரை, காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்தச் சோதனையில், 1.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மலர்ராஜனிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, மலர்ராஜனிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருடைய மனைவியும் இந்தத் தொழிலில் ஈடுபட்டதும், இரண்டு மாதம் முன்பு கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. மலர்ராஜன் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:'கள்ளழகர் திருவிழாவில் புறக்கணிக்கப்பட்ட தேனூர் பாரம்பரியம்'