கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் உள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(21). இவரது தந்தை சின்னப்பா ஓசூரில் மின்வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ரஞ்சித் குமார் இரவு நேரங்களில் வீட்டிற்கு தாமதமாகவே வந்ததாக கூறப்படுகிறது.
கழுத்தில் துப்பட்டா சுற்றிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு! - Youth body recovered
கிருஷ்ணகிரி: ஓசூரில் கழுத்தில் துப்பட்டா சுற்றியவாறு பிணமாக மீட்கப்பட்ட இளைஞரின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகேயுள்ள நெல்லி மரத்தடியில் கழுத்தில் துப்பட்டா சுற்றியவாறு கீழே இறந்து கிடந்த ரஞ்சித் குமாரைப் பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த ஹட்கோ காவல்துறையினர் ரஞ்சித்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து தற்கொலையில் ஈடுபடுவதற்கான சூழ்நிலை இல்லை என்பதால், ரஞ்சித் குமாரின் இறப்பில் சந்தேகமிருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் ஓசூர் ஹட்கோ காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.