கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள தேவிசெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் கிரிஷ் (22), மஞ்சுநாத் (26). கிரிஷ் ஓசூர் பகுதியில் கட்டட வேலை பார்த்து வருகிறார். அதேபோல மஞ்சுநாத் ஓசூரிலுள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்றிரவு (அக்.07) ஓசூரில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்குமிடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், கிரிஷ் மஞ்சுநாத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மஞ்சுநாத் வீட்டிலிருந்த கத்தியை எடுத்துவந்து கிரிஷை குத்தியுள்ளார்.