தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

21 வயதில் ஊராட்சி மன்றத் தலைவராக வாகை சூடிய இளம்பெண்!

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே ஊராட்சி மன்றத் தலைவராக கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் இளம் மாணவி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

student
student

By

Published : Jan 2, 2020, 7:53 PM IST

Updated : Jan 3, 2020, 5:13 PM IST

சுயேச்சை வேட்பாளர்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்டது கே.என். தொட்டி ஊராட்சி. இதில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு, அக்கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெ. சந்தியா ராணி (21) சுயேச்சையாக போட்டியிட்டார்.

210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் 315 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் சந்தியா ஆயிரத்து 170 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 950 வாக்குகள் பெற்றனர். 210 வாக்குகள் அதிகம்பெற்று சந்தியா வெற்றி பெற்றார்.

21 வயதில் ஊராட்சி மன்றத் தலைவர்

வாகை சூடிய சந்தியா ராணி

ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சந்தியா ராணி, கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளம் அறிவியல் வணிகவியல் நிர்வாகம் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜெயசாரதி, ஏற்கெனவே கே.என்.தொட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெற்றி வாகை சூடிய முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா!

Last Updated : Jan 3, 2020, 5:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details