தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கில் பணிபுரியும் காவலர்களுக்கு யோகா பயிற்சி! - Krishnagiri District News

கிருஷ்ணகிரியில் கரோனா ஊரடங்கில் பணிபுரியும் காவலர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

காவலர்களுக்கு யோகா பயிற்சி
காவலர்களுக்கு யோகா பயிற்சி

By

Published : Jul 26, 2020, 5:29 PM IST

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் ஆலோசனையின் பேரில் காவல் துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் நடைபெற்ற இப்பயிற்சியை கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார்.

இதில், கிருஷ்ணகிரி நகரம், தாலுகா போக்குவரத்து காவல் துறையினர், சிறப்பு பிரிவு குற்றப்பிரிவு காவல் துறையினர், மகளிர் காவல் துறையினர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த யோகா பயிற்சியை அரசு கலைக்கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் சுந்தரம் வழங்கினார்.

காவலர்களுக்கு யோகா பயிற்சி

இதில் மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்த பயிற்சியானது கரோனா காலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு பல்வேறு மன உளைச்சலை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும். இந்த யோகாசன பயிற்சி காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த ஓட்டம் சீர்படுதல், ஞாபக திறன் மேம்படுத்தல், உடல்வலிமை பெறுதல் போன்றவைகள் ஏற்படும் என பயிற்சியாளர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திருப்பத்தூரில் முழு ஊரடங்கை ஆய்வு செய்த ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details