கிருஷ்ணகிரி:ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல பிரியாணி கடையில் சமைக்கப்படும் பிரியாணிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புள்ளது. இதனாலேயே தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு பிரியாணி வாங்குவது வழக்கம்.
இந்தக் கடையில் ஆர்டர் செய்வோருக்கும் டெலிவரி செய்யும் வசதி உண்டு. இந்த நிலையில், ஒசூரைச் சேர்ந்த கார்த்திக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் இந்த கடையில் 4 சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார்.