தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிக்கல்வி சார்பில் உலக ஆட்டிசம் தினம் கடைபிடிப்பு - உலக ஆட்டிசம் தினம்

கிருஷ்ணகிரி: உலகெங்கிலும் ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி ஆடிச தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டதில் உலக ஆடிசம் தினம் கடைபிடிக்கப்பட்டது.

உலக ஆட்டிசம் தினம்

By

Published : Apr 3, 2019, 8:25 AM IST

ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு ஆகும். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2ல் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரியில் உலக ஆட்டிசம் தின

கட்டிகானப்பள்ளி புதுாரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளி மையத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி கேக் வெட்டி மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஊட்டினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மூலம் தனித்திறன்களை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட தகவல்கள்

இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு இக்குறைபாடு உள்ளது. இதன் அறிகுறியாக ஆறு மாதங்கள் கடந்தும் தாய் முகம் பார்த்து குழந்தை சிரிக்காமல் இருத்தல், தாயின் கண்களை நேருக்குநேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்களான பின்பும் மழலை சப்தங்கள் செய்யாமலிருத்தல், ஒரே இடத்தில் அமர்ந்திருந்தல் ஆகியவை ஆட்டிசத்தின் அறிகுறிகளாகும்.

உறுதுமொழி

ஆட்டிசம் பாதிக்கப்பட்டோருக்கு உறைவிடம், பாதுகாப்பு, முறையான கவனிப்பு, மரியாதை, உரிய சிகிச்சை கிடைக்க பாடுபடுவோம் என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் அருண்குமார், ஜித்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details