தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன அழுத்தம் - நாக்கை அறுத்துக்கொண்ட தொழிலாளி - krishnagiri latest news

மனஅழுத்தத்தில் கத்தியால் தனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிய கட்டடத் தொழிலாளியின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாக்கை அறுத்துக் கொண்ட கட்டடத் தொழிலாளி முருகேசன்
நாக்கை அறுத்துக் கொண்ட கட்டடத் தொழிலாளி முருகேசன்

By

Published : Sep 1, 2021, 8:20 PM IST

கிருஷ்ணகிரி: ஒசூர் மாநகராட்சியின் வசந்த் நகரில் வசிப்பவர் முருகேசன் (58). கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி, ஒருமகன், ஒருமகள் உள்ளனர். இவர் எப்போதும் மனஅழுத்தத்தில் உழன்று, யாருடனும் பழகாமல் தனித்து இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (செப்.1) காலை, முருகேசன் கத்தியால் தனது நாக்கை தானே வெட்டிக்கொண்டுள்ளார். இதனை அறிந்த அவரது குழந்தைகள், துண்டான நாக்கை நெகிழி பையில் எடுத்துக்கொண்டு முருகேசனை ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

நாக்கை அறுத்துக் கொண்ட கட்டடத் தொழிலாளி முருகேசன்

அறுவை சிகிச்சை மூலம் இணைக்கப்பட்ட நாக்கு

அங்கு முருகேசனின் நாக்கு மீண்டும் அறுவை சிகிச்சை முலம் இணைக்கப்பட்டது. ரத்த ஓட்டம் துண்டிக்கப்பட்டதால், நாக்கு இனி செயல்படாது என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பேசுவதற்கு பிரச்னை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகரை கடத்திய கும்பல் கைது

ABOUT THE AUTHOR

...view details