தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் கரோனா அறிகுறிகளுடன் பெண் ஒருவர் அனுமதி - கிருஷ்ணகிரியில் கரோனா

கிருஷ்ணகிரி: 40 வயதுடைய பெண் ஒருவர் கரோனா அறிகுறிகளுடன் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

krishnagiri-government-hospital
krishnagiri-government-hospital

By

Published : Mar 29, 2020, 7:51 PM IST

Updated : Mar 30, 2020, 7:44 PM IST

தருமபுரி மாவட்டம் பேகரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீட்டு வேலை செய்துவந்தவர். இதையடுத்து தருமபுரிக்கு வந்த அவர், கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டார்.

அதன் காரணமாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனை கரோனா ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து கரோனா தொற்று எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது என்று கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில்,

"எதிர் டிரன்ஸ்கிரிப்ட்ஸ் பாலிமரேஸ் தொடர்வினை விளைவு"-(REVERSE TRANSCRIPTASE POLYMERASE CHAIN REACTION) முறை பயன்படுத்தி சோதனைக்கு தொடர்புடைய நோய்தொற்று உடையவரின் சளி மாதிரிகள் உட்படுத்தப்பட்டு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

இவ்வாறு புதிய வகை உலகை அச்சுறுத்தும் ‘பாண்டமிக்’ வகை (ஒரே நேரத்தில் உலகம் முழுக்க பரவும்) தொற்று நோயாக இருப்பதால் இந்த நோய் இருப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரியாக உறுதி செய்தவுடன் மாநில அரசுகள் வெளியிடும் என்றார்.

இதையும் படிங்க:'ஈரோட்டில் 6 பேருக்கு கரோனோ உறுதி' - ஆட்சியர் கதிரவன்

Last Updated : Mar 30, 2020, 7:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details