கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவல்நத்தம் கூட்ரோடு சாலையில் உள்ள டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணியாற்றிவந்த ராஜா என்பவர், கடந்த 14ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும்வகையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், கரூர், திருவாரூர், தூத்துக்குடி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்புப் போராட்டங்களையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருகின்றனர்.
மேலும், கொலை செய்யப்பட்ட ராஜாவின் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்கி, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைவைக்கப்பட்டது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ராஜாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ராஜாவின் மனைவிக்கு அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப சத்துணவு, அங்கன்வாடி மையத்தில் பணியும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் ஊழியர் படுகொலையை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.