கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள பேட்டப்பனூர் கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிபவர் ராஜா(47). ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு இவர் கடையை மூடும் வேளையில் கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை! - கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே டாஸ்மாக்கில் பணிபுரியும் விற்பனையாளர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி
இதுகுறித்து தகவல் அறிந்த கடையின் மேற்பார்வையாளர் ஜெகநாதன், குருபரப்பள்ளி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.