தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் நிலத்தில் காட்டுத் தீ! - சினிகிரிப்பள்ளி

கிருஷ்ணகிரி: வேளாண் நிலத்தில் அறுவடைசெய்து விற்பனைக்காக வைத்திருந்த 12 லட்சம் மதிப்புள்ள உருளைக்கிழங்கு, பூண்டு காட்டுத் தீயால் எரிந்து நாசமடைந்தது.

விவசாய நிலத்தில் காட்டுத் தீ!
விவசாய நிலத்தில் காட்டுத் தீ!

By

Published : Apr 9, 2021, 8:04 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள சினிகிரிப்பள்ளி கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை செய்துவருபவா் லோகநாதன். இவர் தனது வேளாண் நிலத்தில் விளைந்த பூண்டு, உருளைக்கிழங்கை அறுவடைசெய்து கீத்துக் கொட்டகை அமைத்து அதில் வைத்திருந்தார்.

விற்பனை செய்வதற்காகத் தயார் நிலையில் வைத்திருந்தபோது தன் நிலத்தின் அருகே எரிந்துகொண்டிருந்த காட்டுத்தீ திடீரென கீத்துக் கொட்டகையின் மீது விழுந்து பரவி உருளைக்கிழங்கு, பூண்டு போன்றவை எரிந்து சாம்பலாகின.

தீ விபத்து குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ராமராஜ், பச்சையப்பன் பிரபு, சீனிவாசன் ஆகியோர் தீயணைப்பு வாகனத்துடன் விரைந்துசென்று எரிந்துகொண்டிருந்த தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்து தீயை அணைத்தனர்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமருடன் தமிழ்நாடு தலைமை செயலாளர் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details