தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி! - காட்டு யானை பலி

கிருஷ்ணகிரி அடுத்த வெலகலஹள்ளி கிராமம் அருகே உள்ள மேல்காடு பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது.

கிருஷ்ணகிரியில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி!
கிருஷ்ணகிரியில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி!

By

Published : Feb 13, 2023, 1:54 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு ஊடேதுர்கம் பகுதி வழியாகக் கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இடம்பெயர்ந்து. இந்த யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்த மூன்று காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தன.

இந்த நிலையில் இன்று காலை வெலகளஅள்ளிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் முகாமிட்டிருந்த மூன்று காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் வந்தது. அதிலிருந்து பிரிந்த ஒற்றை யானை வெலகளல்லியில் உள்ள விவசாய நிலத்தில் உணவு தேடி வந்தது.

அப்போது தனியார் விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளை நீர் மோட்டாரின் மின்சார ஒயரானது விவசாய நிலத்தின் தென்னை மரங்களுக்கு மேல் பகுதியில் வரிசையாகக் கட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவுக்காக யானை தென்னை மரத்தில் உள்ள மட்டைகளைப் பிடித்து இழுக்கும் போது துரதிருஷ்டவசமாக மின் வியரையும் சேர்த்துக் கடித்துள்ளது.

இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ஆண் யானை பலியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை வனத்துறையினர் விரைந்து சென்று இடத்தின் உரிமையாளரிடமும், சம்பவ இடத்திலும் யானை இறந்ததற்கான காரணங்களை விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓசூரில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details