கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் கொம்பக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சிக்கமாதப்பா என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது ஒற்றை காட்டு யானை அவரை தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.
ஓசூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த நபர் உயிரிழந்தார்.
மாடு மேய்த்துக் கொண்டிருந்த நபர் பலி
தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு காவல் துறையினருக்கு தெரிவித்து உயிரிழந்த சிக்கமாதப்பா உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.