தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீங்கள் ஜெயிக்கவேண்டும்... எங்களுக்கு சாப்பாடு இல்லை..' ஆட்சியரிடம் மனம் நொந்து பேசிய மூதாட்டி! - ls polls 2019

கிருஷ்ணகிரி: திருநேர் அண்ணாமலை கோயில் அருகே நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி ஒருவர் மனம் நொந்து பேசிய நிகழ்ச்சி அனைவர் மனதையும் உருக்கும் விதமாக அமைந்தது.

old lady_krishnagiri

By

Published : Mar 15, 2019, 7:20 PM IST

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதனையொட்டி வாக்காளர்களிடம் பல்வேறு நிலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை திருக்கோயில் பகுதியில் உள்ள சாதுக்களுக்கு வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கலந்துகொண்டு வாக்களிப்பது எப்படி, வாக்களித்ததை இயந்திரம் மூலம் சரிபார்ப்பது, உறுதி செய்வது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது, அங்க வந்த மூதாட்டி ஒருவர், 'நீங்கள் ஜெயிக்க வேண்டும், நீங்கள் எங்களுக்கு எல்லாம் நல்லது செய்யவேண்டும். எங்களுக்குச் சாப்பாடு இல்லை, என்னால் ஒன்றும் முடியவில்லை. நீங்கள்தான் எனக்கு நல்லது செய்யவேண்டும்' என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் தெரிவித்தது மனதை உருக்கும் விதமாக இருந்தது.


old lady_krishnagiri

ABOUT THE AUTHOR

...view details