கர்நாடக மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேறி தமிழ்நாட்டின் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வினாடிக்கு 560 கனஅடி நீர்

நேற்று முன்தினம் (ஜூன் 5) வினாடிக்கு 400 கனஅடியாக இருந்த நீர்வரத்து, கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகள், ஒசூர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று (ஜூன் 6) வினாடிக்கு 560 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்கும் சமயங்களில், ஆற்றங்கரையோரமாக உள்ள தொழிற்சாலைகள் அவர்கள் தேக்கி வைத்த ரசாயன கழிவுகளை தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதனால், தற்போது கனமழை காரணமாக தனியார் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் ஆற்றில் கலந்திருப்பதால், அணையின் நீரானது துர்நாற்றத்துடன் நுரை பொங்கி காணப்படுகிறது.