தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனை குடிநீர் தொட்டியிலிருந்து வீணாகிய தண்ணீர் - நோயாளிகள் வேதனை! - குடிநீர் தேக்க தொட்டி

ஓசூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் குடிநீர் தொட்டியிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக கால்வாயில் கலந்த அவலம் அரங்கேறியுள்ளது.

Etv Bharat அரசு மருத்துவமனை குடிநீர் தொட்டியிலிருந்து வீணாகிய தண்ணீர்
Etv Bharat அரசு மருத்துவமனை குடிநீர் தொட்டியிலிருந்து வீணாகிய தண்ணீர்

By

Published : Apr 28, 2023, 10:59 PM IST

அரசு மருத்துவமனை குடிநீர் தொட்டியிலிருந்து வீணாகிய தண்ணீர்

கிருஷ்ணகிரி:ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 17 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கோடை காலம் என்பதால் ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாட்டு அதிகமாக உள்ளது. அரசு மருத்துவமனையிலும் குடிநீர் கிடைக்காமல் நோயாளிகள் மற்றும் அவர்களைப் பார்க்கs செல்லும் பொதுமக்கள் ஆகியோர் கடைகளில் குடிநீரை வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. இது தவிர, அரசு மருத்துவமனையில் கை கழுவும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றிலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.

இந்த நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து நீண்ட நேரமாக ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக கால்வாயில் சென்றது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ள நிலையில் மருத்துவமனையில் குடிநீர் தொட்டியில் குடிநீர் வீணாகி சென்றது நோயாளிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வந்து சென்ற பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:எங்களுக்கும் தும்பிக்'கை' இருக்கு.. அடிகுழாயில் அடித்து நீர் அருந்திய யானை!

ABOUT THE AUTHOR

...view details