தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் பஞ்சம்: காலி குடங்களுடன் அலுவலர்களை முற்றுகையிட்ட மக்கள்!

கிருஷ்ணகிரி: ஏணிமுச்சேந்திரம் கிராமத்தில் குடிநீர் பஞ்சம் நிலவுவதால், காலி குடங்களுடன் கிராம அலுவலர்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

water drought in krishnagiri thenkanikottai
water drought in krishnagiri thenkanikottai

By

Published : Mar 14, 2020, 11:50 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஏணிமுச்சேந்திரம் இந்தக் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்தக் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாகச் சரியாக குடிநீர் வழங்காததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக ஊராட்சித் தலைவரிடமும், வார்டு உறுப்பினர்களிடமும் முறையிட்டும் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. தற்காலிகத் தேவைக்காகப் பக்கத்தில் உள்ள தோட்டங்களிலிருந்த குழாய் மூலம் உரிமையாளர்கள் வழங்கியபோதும், தண்ணீர் போதுமானதாக இல்லாததால் குடிப்பதற்கும் அன்றாட தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாத அவல நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டனர்.

எனவே, இதற்குத் தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி, கிராம மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்ய கோரிக்கை வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details