கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள நல்லூர் சோதனைச்சாவடி மற்றும் ஓசூர் சிப்காட் அருகில் உள்ள சோதனைச்சாவடி ஆகிய இரண்டு சோதனைச்சாவடிகளிலும், ஒரே நேரத்தில் இன்று அதிகாலை 4 மணி முதல், மாவட்ட டி.எஸ்.பி கிருஷ்ணராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரியிலும் அதிரடி சோதனை! - ஓசூர் சிப்காட் சோதனை சாவடி
கிருஷ்ணகிரி: நல்லூர் மற்றும் ஓசூர் சிப்காட் சோதனைச்சாவடிகளில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.
![கிருஷ்ணகிரியிலும் அதிரடி சோதனை! raid](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9850762-730-9850762-1607751154609.jpg)
raid
இதில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து சோதனையின் முடிவிலேயே தெரியவரும். மாநிலம் முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகளில் நேற்றிரவு முதல் மாநில லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திடீர் சோதனை! - கணக்கில் வராத பணம் பறிமுதல்!