கிருஷ்ணகிரி:ஒசூர் தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து அருகே உள்ள கிராமப் பகுதிகளில் வேளாண் பயிர்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
இந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றைக் காட்டு யானை நேற்று (நவம்பர் 27) மாலை கொல்லப்பள்ளி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது யானையைப் பார்த்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.