கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் தொன்னையன் கொட்டாய் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கதவுகளில் ”வெற்றிவேல் வீரவேல்” என்ற வாசகம் பொறித்த வில்லைகளை சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ஒட்டியுள்ளார்.
கறுப்பர் கூட்டத்தை எதிர்க்கும் வீரப்பன் மகள் - கந்தசஷ்டி கவசம்
கிருஷ்ணகிரி: கறுப்பர் கூட்டத்தை எதிர்த்து ”வெற்றிவேல் வீரவேல்” என்ற வாசகம் பொறித்த வில்லைகளை சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா குடியிருப்புப் பகுதிகளில் ஒட்டினார்.
![கறுப்பர் கூட்டத்தை எதிர்க்கும் வீரப்பன் மகள் karuppar koottam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8258709-thumbnail-3x2-ksg.jpg)
Veerappan's daughter
சமீபத்தில் பாஜகவில் இணைந்த இவருக்கு குறுகிய காலத்தில்மாநில இளைஞரணி துணைத் தலைவர்பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 01) கிருஷ்ணகிரியில் வித்யா வீரப்பன் தலைமையில் கறுப்பர் கூட்ட நடவடிக்கைகளை எதிர்த்து வில்லைகளை ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியின்போது முப்பதுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பத்திரிகையாளர் பிரகாஷை கைது செய்யக் கோரி மனு
!