தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள்! - ஈடிவி பாரத் செய்தி

நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்களால் பாஜகவில் இணைந்ததாக வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்தேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

veerappans-daughter-joins-bjp
veerappans-daughter-joins-bjp

By

Published : Feb 22, 2020, 10:41 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் விழா பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அதில், வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி என்ற வித்யா வீரப்பன் பாஜகவில் இணைந்துள்ளது தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள் வித்யா ராணி.

இது தொடர்பாக ஈடிவி பாரத்துக்கு வீரப்பன் மகள் வித்யா அளித்த பிரத்தேக பேட்டியில்," கடந்த இரண்டு வருடங்களாக நரேந்திர மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, இப்போது அரசியலில் இணைந்துள்ளேன். இதற்கு முன்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை, தனது குடும்ப நண்பர் ஒருவர் மூலம் சந்தித்துள்ளேன்.

அப்போது அவர் என்னிடம் நீங்கள் தேசிய அளவில் சேவை செய்தால் நன்றாக இருக்கும் என்றும், இவ்வாறான பெரிய பின்புலத்தைக் கொண்ட நீங்கள் தேசிய சேவை செய்ய வேண்டும் என்றும் கூறினார். மக்கள் உங்கள் மீது சரியான அபிப்பிராயம் கொண்டுள்ளதால், நிச்சயமாக நீங்கள் மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்று என்னிடம் தெரிவித்திருந்தார்.

அதன் காரணமாக, நான் தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன். பாஜகவில் இணைந்துள்ள உங்களுக்கு என்ன மாதிரியான பதவி கொடுக்கப்படவுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த வித்யாராணி, இன்னும் என்ன பதவி என்று எனக்கு தெரியவில்லை.

இருந்தபோதிலும் எனக்கு என்ன பதவி கொடுத்தாலும், அந்தப் பதவியை வைத்துக்கொண்டு மக்களுக்கு என்னால் எந்த அளவு சேவை செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு நான் சேவை செய்வேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'மினி சாதனையாளன் டெனி' - அடுத்த இலக்கு கின்னஸ்..!

ABOUT THE AUTHOR

...view details