இந்தியத் தொல்லியல் நிறுவனம், மைசூர், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம் ஆகியவற்றின் சார்பாக 11ஆம் ஆண்டு தேசியக் கருத்தரங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சென்னை கே.வி. சர்மா ஆய்வு மையத்தின் தலைவர் எஸ்.டி. ஸ்ரீனிவாசராமன் கருத்தரங்க தலைமை உரையாற்றினார்.
அப்போது பேசியவர், "பெண்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கிக்கொள்ளவும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் தொல்லியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தொல்லியல் தொடர்பான ஆய்வுகள் வழக்கொழிந்து வருகின்றன. எனவே, இளம் தலைமுறையினர் அனைவரும் தொழில் தொடர்பான ஆய்வில் செயல்படுவதற்கு இக்கருத்தரங்கம் ஊக்கம் அளிக்கும்" என்று கூறினார்.
இன்று வரை நடைபெறும் இந்தத் கருத்தரங்கில், இந்திய அளவில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்தவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத் தொல்லியல் தொடர்பான கல்வெட்டுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றனர்.