தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் விளை நிலங்களை நாசமாக்கும் வகையில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இந்நிலையில், ஐதராபாத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தருமபுரிக்கு விவசாய நிலங்களில் குழாய்கள் மூலம் பெட்ரோலிய எரிவாயு எடுத்துச் செல்லப்படுவதாக தெரிகிறது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி அருகேயுள்ள வரட்டனப்பள்ளி, பெரியமட்டாரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலுள்ள விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதித்து பெட்ரோலிய எரிவாயு கொண்டு செல்வதற்காக நிலம் கையகப்படுத்த அலுவலர்கள் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வந்தபோது, கிராம மக்கள் அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கிராம மக்கள் விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய எரிவாயு குழாய் மூலம் கொண்டு செல்லக்கூடாது. இதனால் விவசாயமும் பொய்த்து போவதோடு, குடியிருப்பு வீடுகள், தென்னை, மா, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களும் பாதிக்கும். எனவே மத்திய அரசு விளை நிலங்கள் வழியாக பெட்ரோலிய எரிவாயுகளை எடுத்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கிராம மககள் வலியுறுத்தினர்.