தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூரு சோதனைச் சாவடிகளில் ரெய்டு: மேஜைக்கு அடியில் சிக்கிய பணம்

கிருஷ்ணகிரி: ஓசூரு ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது இரண்டு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.

ஜுஜுவாடி
ஜுஜுவாடி

By

Published : Oct 17, 2020, 5:42 PM IST

தமிழ்நாடு - கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருவில் ஜுஜுவாடி என்ற இடத்தில் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு எல்லைக்குள் நுழையும் வாகனங்களைச் சோதனையிடவும் தற்காலிக பர்மிட் வழங்கவும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல சற்றுத் தொலைவில் சிப்காட் வளாகத்தின் அருகே தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்து தற்காலிக பர்மிட் வழங்க ஒரு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே இரு மாநிலங்களுக்கு இடையே அதிகபட்சமான வாகனங்கள் இடம் பெயர்வது இந்தச் சோதனைச் சாவடிகள் வழியாகத்தான்.

ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் இதைக் கடக்கின்றன. வாகனங்களை நிறுத்திப் பிடித்துத் தர இவர்களுக்குத் தரகர்கள்கூட உள்ளனர். இந்த நிலையில் ரகசிய தகவலின்பேரில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜன், ஆய்வாளர் முருகன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இன்று (அக்டோபர் 17) அதிகாலை ஓசூரு சோதனைச் சாவடிகளுக்கு வந்தனர்.

இன்கம்மிங் செக்போஸ்டில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 120 ரூபாயை மேஜைக்கு அடியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இரவு பணிக்கு வந்த சில மணி நேரங்களில் இந்தச் சோதனைச்சாவடியில் இருந்த ஆர்டிஓ அலுவலர்கள், ஊழியர்கள் வாங்கியுள்ள கணக்கில் வராத அந்தப் பணத்தைப் பறிமுதல்செய்தனர்.

இந்தச் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் சுப்புரத்தினத்திடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையானது மூன்றரை மணிநேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details