தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் அண்ணா சிலையை திறந்து வைத்த உதயநிதி - Udayanidhi Stalin opened anna statue

கிருஷ்ணகிரி: பேரறிஞர் அண்ணாவின் சிலையை திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

dmk
dmk

By

Published : Feb 17, 2020, 11:54 AM IST

திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தருமபுரியில் இளைஞர் அணி பயிற்சி பாசறைக் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டு, கிருஷ்ணகிரிக்கு வருகை தந்தார்.

பின்னர் கிருஷ்ணகிரி ஒன்றியம் பெரிய முத்தூர் ஊராட்சி துவாரகாபுரி கிராமத்தில் திமுக கொடியை ஏற்றிவைத்து, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையை திறந்துவைத்தார். பின்பு அங்குக் கூடியிருந்த தொண்டர்களிடையே அவர் சிறப்புரையாற்றினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான செங்குட்டுவன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்ணா சிலையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டச் செயலாளர் சுகவனம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன், துணைச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அண்ணா உருவம் பதித்த நாணயம் குறித்து நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு!

ABOUT THE AUTHOR

...view details