கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சகாயநாதன். இவரது மகன் ஸ்டீபன்(11) சகாயநாதனின் தம்பி ஜெயப்பிரகாஷ். இவரது மகன்கள் சாரோன்ராஜ்(11) கிறிஸ்தோன்ராஜ்(6) ஆகிய மூன்று பேரும் பர்கூரில் உள்ள தனியார் பள்ளில் படித்து வந்தனர்.
காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை என்பதால் சிறுவர்கள் ஸ்டீபன், சாரோன்ராஜ், கிறிஸ்தோன்ராஜ் ஆகிய மூவரும் கந்திகுப்பம் எலத்தகிரி சாலையில் உள்ள ஏரிக்கு சென்றதாகத் தெரிகிறது. ஏரியில் மணல் அள்ளப்பட்டிருந்த குழியில் தேங்கியிருந்த நீரில் ஸ்டீபன்,கிறிஸ்தோன்ராஜ் ஆகிய இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர்.
ஏரியில் முழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழப்பு அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக நீருக்குள் மூழ்குவதைக் கண்டு சிறுவன் சாரோன்ராஜ் அதிர்ச்சியில் அலறியுள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து ஏரியில் மூழ்கிய இரண்டு சிறுவர்களை மீட்க முயன்றனர். அதற்குள் இருவரும் முழுவதுமாக நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏரியில் மூழ்கி பலியான சிறுவர்களின் உடல்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைலமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். சிறுவர்களின் உடலைக் கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.