கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே, ஊத்தங்கரை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவிலிருந்து, திருவண்ணாமலை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரில், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட 204 கிலோ அளவிலான குட்கா பொருட்கள் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த கள்ளக்குறிச்சி சந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தஸ்தகீர் (25), அசோக்குமார் (52) ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த குட்கா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது இதையும் படிங்க:காவல் துறை டிஜிபி மகனின் ஐ-பேட் திருட்டு!