கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள சூடசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூப்பள்ளியப்பா (67). இவர் கடந்த 3ஆம் தேதி கழுத்தறுப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக்கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியில் பதிவான கைபேசி எண்களை கொண்டு விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் சந்தோஷ் குமார் (23) என்பவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.