தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு - கர்நாடக எல்லைப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தம்

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு - கர்நாடக எல்லைப்பகுதிகளில் பயணிகள், மருத்துவ பரிசோதனைக்கு பின்பே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தேனி
தேனி

By

Published : Mar 24, 2020, 9:39 AM IST

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு மார்ச் 21ஆம் தேதி முதல் 31 வரை மாநில எல்லைகள் மூடப்படுவதாக அறிவித்திருந்தது. அதனடிப்படையில், மத்திய அரசு, தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களையும், கர்நாடக மாநிலத்தின் 7 மாவட்டங்களையும் தனிமைப்படுத்த பரிந்துரைத்து மாநில எல்லைகளுக்குள் போக்குவரத்திற்கு தடை விதித்திருந்தது.

இந்தநிலையில் கர்நாடக-தமிழ்நாடு எல்லையான ஜூஜூவாடி வரை குறைந்த எண்ணிக்கையிலான தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் பெங்களூரு தெற்கு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டமென்பதால் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் தமிழ்நாட்டிற்கு வருவோர் அத்திப்பள்ளி எல்லைவரை ஆட்டோக்களில் பயணித்து, பின்பு தமிழ்நாட்டு பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

இதனால், தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும், ஓட்டுநர்களும் 20க்கும் அதிகமான மருத்துவக்குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு, வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில் 30க்கும் அதிகமான காவல்துறையினர், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு -கர்நாடக எல்லைப்பகுதி

ஒசூர் பேருந்து நிலையம், வழக்கத்தைவிட பயணிகள் குறைந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான அரசு பேருந்துகளும், 10க்கும் குறைவான தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: விழிப்புணர்வு சிற்பங்கள் வியக்கவைக்கும் இளைஞ
ர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details