ஓசூர் அருகேயுள்ள பெரிய சப்படி கிராமத்தில், மாட்டுப்பொங்கலை முன்னிட்டு இன்று பாரம்பரிய எருதாட்டவிழா நடைபெற்றது. இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கிராமத்தின் பின்புறமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் மடக்கிப் பிடித்து அடக்கினர். அப்போது காளைகளின் மேல் கட்டப்பட்டிருந்த அலங்காரத் தடுப்புகளையும், பரிசுப்பொருட்களையும் வெற்றி பெற்றவர்கள் பறித்துச் சென்றனர்.