கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதி அருகே இன்று காலை காட்டுயானை தாக்கியதில் மூதாட்டி வெங்கட லட்சுமம்மா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடல் ஓசூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது மூதாட்டியின் குடும்பத்தினருக்கு முதல்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு அரசின் சார்பில் வனத்துறையினர் வழங்கினர்.