தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி தமிழகத்தில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்' - TN Election date change

கிருஷ்ணகிரி: மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 18இல் நடைபெறுவதால், அன்றைய தினம் தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் டிகே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

TK Rankarajan

By

Published : Mar 12, 2019, 11:32 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பரப்புரை, நிதியளிப்புப் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச்.11) நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் டிகே.ரங்கராஜனிடம் தேர்தல் நிதியாக, கிருஷ்ணகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு டிகே.ரங்கராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு தென்னகத்தினர் அதிகளவில் பங்கேற்கும் வழக்கம்கொண்ட முக்கியமான திருவிழாவாக இருந்துவருகிறது. இந்தாண்டு மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினமே தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள், லட்சக்கணக்கான மக்கள் திருவிழாவினைக் கண்டுகளிக்கும் விதமாக, பாதிப்புகள் இல்லாத வகையில் நாடாளுமன்றத் தேர்தல் தேதியை தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி இல்லாமல் மற்றொரு தேதியில் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details