தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத மகா உற்சவ விழா தொடக்கம்! - மகாபாரத மகா உற்சவ விழா

கிருஷ்ணகிரி: முருகன் பள்ளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோயிலின் 45ஆவது மகாபாரத மகோற்சவ விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

fest

By

Published : Apr 30, 2019, 9:26 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் முருகன் பள்ளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோயிலின் 45ஆவது மகாபாரத மகோற்சவ விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன், தியாகி சுப்பிரமணிய சிவா நாடக கலைக்குழுவின் மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

முருகன் பள்ளம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத மகா உற்சவ விழா

இந்த மகாபாரத தெருக்கூத்தில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அர்சுணன் தபசு என்ற இதிகாச நாடகம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் கெளரவர்களை கூண்டோடு அழிக்க சிவப்பெருமானிடம் பாசுபதம் என்ற ஆயுதம் பெற, அர்ச்சுணன் கோயில் முன்பாக அமைக்கப்பட்டு இருந்த தபசு மரத்தின் கீழ் சிவபெருமானுக்கு காட்டு மலர்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்த பின் தபசு மரத்தில் ஏறும் நிசழ்ச்சி நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details