பெங்களூரு:கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த அத்திப்பள்ளி பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட சிலர் முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சித்தாபுரா பகுதியில் சோதனையில் ஈடுபட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சுற்றித் திரிந்த 3 பேரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நல்லகனி, சுப்பிரமணியன் உள்ளிட்ட மூவர் என்று போலீசார் தெரிவித்தனர்.