தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூரில் நிகழ்ந்த விபத்தில் அக்கா, தங்கை உட்பட மூவர் பலி! - Hosur bike accident

ஒசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஈச்சர் வாகனம் மோதியதில் அக்கா, தங்கை மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

பைக் மீது ஈச்சர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
பைக் மீது ஈச்சர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

By

Published : Feb 15, 2023, 6:36 AM IST

Updated : Feb 15, 2023, 6:57 AM IST

கிருஷ்ணகிரி:ஓசூர் அடுத்த இருதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகப் பதவி வகிக்கிறார். இவரது மகள்கள் தமிழரசி (19) மற்றும் தமிழ்ப்பிரியா (17). இருவரும் பி.பார்ம் படித்து வந்தனர்.

பிப்ரவரி 14(செவ்வாய்கிழமை) அன்று நண்பகல் சகோதரிகள் இருவர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த முனிராஜ் என்பவரது மகன் அம்பேத்வளவன் (12) ஆகிய 3 பேரும், இருசக்கர வாகனத்தில் தேன்கனிக்கோட்டையில் இருந்து அய்யூர் சாலையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

அந்த வழியாக கோழிப்பண்ணைக்கு தீவனம் ஏற்றி வந்த ஈச்சல் லாரி ஒன்று தேன்கனிக்கோட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது சாப்பிரானப்பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது ஈச்சர் வாகனம் மோதியது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் சகோதரிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை காவல் நிலைய போலீசா, விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஃபிரீசரில் இளம்பெண்ணின் சடலம் - தாபா உரிமையாளர் கைது!

Last Updated : Feb 15, 2023, 6:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details