தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு நடந்தே வந்த தமிழர்கள் - Thiruvannamalai workers

கிருஷ்ணகிரி: பெங்களூரில் வேலை செய்யும் தமிழ்நாடு தொழிலாளர்கள் நடந்தே கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.

கிருஷ்ணகிரிக்கு நடந்தே வந்த தமிழர்கள்
கிருஷ்ணகிரிக்கு நடந்தே வந்த தமிழர்கள்

By

Published : Mar 27, 2020, 7:44 AM IST

தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை சட்டம் அமலுக்கு வந்த நிலையில் நேற்று பெங்களூரிலிருந்து 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் நடந்தே கிருஷ்ணகிரி வந்தனர்.

கிருஷ்ணகிரிக்கு நடந்தே வந்த தமிழர்கள்

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் உத்தரவின்பேரில் தாசில்தார் தண்டபாணி, நகராட்சி ஆணையர் சந்திரா, சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் சக்திவேல் ஆகியோர் அவர்களுக்கு உணவளித்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள், தாங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர். உடனே அவர்களை பரிசோதனை செய்த அலுவலர்கள் திருவண்ணாமலைக்கே சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ஓசூரில் கூட்டத்தை தவிர்க்க மூன்று இடங்களில் காய்கறி விற்க ஏற்பாடு

ABOUT THE AUTHOR

...view details